Categories
குழந்தை வளர்ப்பு லைப் ஸ்டைல்

சமையல் டிப்ஸ்… ”குழந்தைகள் ஒன்ஸ்மோர் கேட்பாங்க” தெரிஞ்சுக்கோங்க …!!

 

கடலைமாவு , மஞ்சள் பொடி , தயிர் ஆகியவற்றை கலந்து கூழாக்கி அதனை தினமும் முகத்தில் தடவி காயவிட்டு பிறகு நன்கு கழுவி வந்தால் முகத்தில் முடி வளர்வதை குறைத்துவிடலாம்.

தோசைக்கு ஊற வைக்கும்போது ஒரு ஸ்பூன் வெந்தயம் , ஒரு ஸ்பூன் கடலைப் பருப்பையும் சேர்த்து ஊறவைத்து அரைத்தால் தோசை மொறுமொறுப்பாக வருவதுடன்,  நல்ல வாசனையாகவும் இருக்கும்.

சீரகம் , ஓமம் , மிளகு இவற்றை வறுத்து பெருங்காயம் , சுக்கு சேர்த்து பொடி செய்யவும் எந்த சுண்டல் ஆக இருந்தாலும் இறக்குவதற்கு முன் இந்தப் பொடியை கொஞ்சம் தூவி கிளறி பயன்படுத்தினால் வாயுக்கோளாறு , வாய்வு , உப்புசம் ஏற்படாமல் தடுக்கும்.

கேரட் சாறுடன் தேன் கலந்து குடித்தால் ரத்த சோகை நீங்கும் , ரத்தம் விருத்தியடையும்.

எந்த கிழங்காக இருந்தாலும் பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் போட்டு வைத்திருந்து , பிறகு எடுத்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

ஆலிவ் எண்ணெயை லேசாக சூடாக்கி அதில் விரல்களை சிறிது நேரம் வைத்திருந்தால் நகம் உடையாமல் இருக்கும்.

வேப்பிலை , கருவேப்பிலை சமஅளவு எடுத்து நீர் சேர்த்து கொதிக்கவிட்டு அந்த நீரை தலையில் அலசினால் பேன் இருக்காது , முடி கருமையாகும் , முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

சப்பாத்தி மிகுந்து  விட்டால் அதை மிக்ஸியில் மைபோல் அரைத்து , சர்க்கரை , வறுத்த முந்திரி சேர்த்து பரிமாறுங்கள் குழந்தைகள் ஒன்ஸ்மோர் என்று கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

வெள்ளைப் பூண்டை அரைத்து பூச்சி கடித்த இடத்தில் வைத்து கட்டினால் வீக்கம் குறையும்.

தேனீர் தயாரிக்கும் போது துளசி இலையை சேர்த்தால் தேநீர் மணமாகவும் இருக்கும் , ஜலதோஷத்திலிருந்து காக்கும் .

Categories

Tech |