சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஸ்ரீராமசமுத்திரம் காவிரி ஆற்றில் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் மணலை கடத்தி சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சட்ட விரோதமாக மணல் கடத்திய குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் தீபன் மற்றும் சுமன் ஆகிய 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.