Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேறு ஒருவருடன் ஓடிய மகள்…. தந்தை எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருமணமான மகள் வேறு ஒருவருடன் ஓடியதால் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள லால்குடி பகுதியில் விவசாயியான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மகளை அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் சண்முகத்தின் மகள் வேறு ஒருவரோடு ஓடிப் போனதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சண்முகம் தனது வீட்டில் வைத்து விஷம் குடித்து மயங்கிவிட்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக சண்முகத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |