காதலர்களை மிரட்டி தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள கொணலையில் இருக்கும் மலை மாதா கோவில் அருகே அமர்ந்து காதலர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் காதலர்களை மிரட்டி தங்கசங்கிலி, செல்போன் ஆகியவற்றை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து காதலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தான் காதல் ஜோடியிடம் இருந்து தங்க சங்கிலி மற்றும் செல்போனை பறித்து சென்றது உறுதியானது. இதனையடுத்து காவல்துறையினர் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.