Categories
சினிமா தமிழ் சினிமா

”பீஸ்ட்” இன்னும் ரிலீசே ஆகல…. அதுக்குள்ள ரசிகர்கள் கொண்டாட்டம்…. நீங்களே பாருங்க….!!!

”பீஸ்ட்’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் யோகி பாபு, அபர்ணா தாஸ், செல்வராகவன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

 

இதனையடுத்து ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாகும் இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர். பிரபல திரையரங்கு ஒன்றில் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Categories

Tech |