அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பேருந்து நிலையத்துக்கான அடிக்கல் நாட்டு பணியை தொடங்கிவைத்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் பேருந்து நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, பேரூராட்சி உதவி இயக்குனர் ராஜா, அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன், தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி ரவிக்குமார், கூட்டுறவு நகர வங்கி தலைவர் நஜிமுதீன், துணை தலைவர் நாசர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மதியரசன், ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், செல்வராஜன், தமிழ்மாறன், நகர அவைத்தலைவர் செய்துகான், கவுன்சிலர் முருகன், முருகானந்தம், பெரியசாமி, அய்யாசாமி, உதயகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இளையான்குடியில் நகர்புற மேம்பாட்டு வளர்ச்சி திட்டத்தின் அடிப்படையில் 3 3/4 கோடி மதிப்பில் பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பேருந்து நிலையம் 5 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது. அதில் 2 1/2 ஏக்கர் பரப்பளவில் 8 பேருந்துகள் நிற்கும் நடைமேடை, 8 கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை , பயணச் சீட்டு வழங்கும் இடம், ஏ.டி.எம். இயந்திரம் உள்ள அறை, உணவகம், தடுப்புச்சுவர், மின்விளக்கு, கண்காணிப்பு கேமரா பொருத்துதல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை, உட்புற சிமெண்ட் சாலை, பயணிகள் அமரும் இருக்கை வசதிகள் போன்ற வசதிகள் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.