இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான எலிசபெத் ட்ரூஸ் வரும் 31ம் தேதி இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார்.
ரஷ்ய நாட்டின் மீது, உக்ரைன் தொடர்ந்து 33-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் உலகளவில் அரசியலில் அதிர்வலைகள் ஏற்பட்டிருக்கிறது. இதில் மேற்கத்திய நாடுகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கிறது. அதாவது, அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைன்-ரஷ்யா போர் தொடர்பில் ரஷ்ய நாட்டை இந்தியா எதிர்க்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறது.
எனினும் இந்த பிரச்சினையில் இந்தியா எந்த நாட்டிற்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலையாக இருக்கிறது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான எலிசபெத் ட்ரூஸ், வரும் 31-ஆம் தேதியன்று இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். இந்திய வெளியுறவுத்துறை மந்திரியான ஜெய்சங்கரை சந்தித்து ஆலோசனை செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.