மேஷ ராசி அன்பர்களே…!!!! இன்று அருகில் இருப்பவர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடர்வீர்கள். முன்னேற்ற பாதைக்கு முட்டுக்கட்டையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். சாமர்த்தியமான பேச்சு மூலம் காரியங்களை வெற்றிகரமாகவும் செய்வீர்கள், ஆனால் தாமதமான பலனே கொஞ்சம் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகத்தான் வந்து சேரும். அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும் போது நீங்கள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு ஓரளவு இருக்கும். புதிய வாடிக்கையாளரிடம் நிதானமாக பேசி வியாபாரம் செய்வது ரொம்ப நல்லது. குடும்பத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். வாகனத்தில் செல்லும் போது ரொம்ப கவனமாக செல்லுங்கள். கொடுக்கல் வாங்கல் விஷியங்களிலும் நீங்கள் ரொம்ப கவனமாக நடந்து கொள்ள வேண்டும். இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேற் கல்வியில் முயற்சி செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் தடைகள் விலகி செல்லும் சக மாணவிகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்