ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்த பணத்தை எலக்ட்ரீசியன் நேர்மையாக காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.
சேலம் மாவட்டத்திலுள்ள அய்யந்திருமாளிகை பகுதியில் எலக்ட்ரீசியனான முத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னங்குறிச்சி செல்லும் சாலையில் இருக்கும் ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஏ.டி.எம் கார்டை எந்திரத்தில் சொருகிவிட்டு ரகசிய எண்ணை பதிவு செய்வதற்கு முன்பு 4000 ரூபாய் எந்திரத்தில் இருந்து வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முத்து சிறுது நேரம் அங்கேயே பணத்துடன் காத்துக் கொண்டிருந்தார்.
ஆனால் யாரும் பணத்தை வாங்க வராததால் அஸ்தம்பட்டி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமாரிடம் முத்து பணத்தை ஒப்படைத்தார். இதனையடுத்து உரியவரிடம் பணத்தை ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் நேர்மையுடன் பணத்தை ஒப்படைத்த முத்துவை காவல்துறையினர் பாராட்டியுள்ளனர்.