Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“ரிஷப ராசிக்கு”….துணிச்சல் பிறக்கும்…. வெற்றி கிடைக்கும்….!!!!

ரிஷப ராசி அன்பர்களே..!!!! இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும. நாள்பட்ட நோய் அகலும் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வர கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் மேல் அதிகாரிகள் கூறுவதற்கு மாற்றுக் கருத்துக்களை கூறாமல்  இருப்பது நல்லது. இன்று  உடல் ஓய்வின்றி உழைப்பீர்கள்.  கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது.

குடும்பத்தில் இருப்பவருடன் நிதானமாக  பேசுவதும், குடும்பத்தில் அமைதி இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் விலகிச் செல்வது போல் இருக்கும், விட்டுப் பிடிப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும் போட்டிகளை தவிர்க்க துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் நீங்கள்  எடுக்கக் கூடும்.  இன்று  மாணவ செல்வங்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பீர்கள். சக மாணவர்களின் முழு  ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். ஆசிரியர்களின் அன்புக்கும் இருப்பிர்கள். இன்றைய நாள் மாணவர்களுக்கு ரொம்ப சிறப்பாக அமையும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை  கொடுக்கக் கூடிய அளவில் அது மட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை

Categories

Tech |