அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஊழியர்களுக்கு அதிக பயன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மத்திய அரசு பழைய பென்சன் திட்டத்தை அறிமுகப்படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறிய நிலையில், மாநில அரசுகள் பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் பழைய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் பழைய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் பழைய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாக முதல்வர் ஹேம்நாத் சட்டசபையில் கூறியுள்ளார். இது அம்மாநிலத்தின் அரசு ஊழியர்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது. இவ்வாறாக மாநில அரசுகளின் அறிவிப்பை தொடர்ந்து மத்திய அரசும் விரைவில் பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் காரத் பழைய பென்ஷன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் எண்ணம் மத்திய அரசிடம் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.