சட்டவிரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பாண்டி என்பது தெரியவந்துள்ளது. இவர் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதனையடுத்து பாண்டியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.