வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள அய்யர்பங்களா இ.பி காலனியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜய் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு விஜய் அதிர்ச்சி அடைந்தார்.
அதன்பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து விஜய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.