கடந்த 2 ஆண்டுகளாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்து வந்தது. லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மக்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதேபோல் சமூக இடைவெளியை கடைபிடித்து பொது இடங்களில் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்த அனைத்து ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றியதால் தான் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவின் அண்டைநாடுகளான அமெரிக்கா, சீனா, தீவு நாடான சமோவா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா 3-வது அலை மீண்டும் ஆரம்பித்துவிடுமோ ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.