Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“மிதுன ராசிக்கு”….. கவனம் தேவை…. அலைச்சல் உண்டாகும்….!!!

 மிதுன ராசி அன்பர்களே….!!!! இன்று காரிய வெற்றி காண கவனமுடன் செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். மனதில் இனம்புரியாத கவலை தோன்றும். திடீர் செலவுகளை சமாளிக்க பிறரிடம் கைமாத்து வாங்கக்கூடிய சூழ்நிலை உருவாகலாம்.  இன்று  புதிய முயற்சிகள் தள்ளிப் போடுவதும், கவனமாக காரியங்கள் செய்வது ரொம்ப நல்லது. மன குழப்பம் நீங்கி தைரியம் இருக்கும். வீண் அலைச்சல் குறையும்,  சிக்கல்கள் தீரும். எண்ணிய காரியம் கைகூடும். உங்களுடைய குறிக்கோள் அனைத்தும் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களால் வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம்.

கணவன் மனைவிக்கு இடையே திடீரென்று கருத்து வேற்றுமை ஏற்படும்,  கவலை வேண்டாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்யுங்கள்.  பொருட்களை கையாளும்பொழுது ரொம்ப கவனமாகவே ஈடுபடுங்கள். இன்று  மாணவர்களுக்கு எப்போதும் போலவே கல்வியில் தடை ஏதும் இல்லை, கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை  பெறக்கூடும்.

இன்று  முக்கியமான பணியினை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் பச்சை நிறம் எப்பொழுதுமே மிதுன ராசிக்காரர்களுக்கு ஒரு சிறந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவன் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அணைத்து காரியமும்  நல்ல படியாகவே நடக்கும்

அதிர்ஷ்ட திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை

Categories

Tech |