Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை எப்போது கிடைக்கும்?…. வெளியாகும் சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசுக்கு கொரோனா நெருக்கடி காலகட்டத்தில் செலவுகள் அதிகரித்ததால் அகவிலைப்படி உயர்வு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமலேயே இருந்தது. இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அரசு ஊழியர்களுக்கு 2021 அக்டோபர் மாதம் 17 விழுக்காட்டில் இருந்து 31 விழுக்காடாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இருப்பினும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இன்னும் அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படாமலேயே உள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

ஊழியர்களுக்கு தலா சுமார் ரூபாய் 2 லட்சம் வரை அகவிலைப்படி நிலுவைத் தொகை வரவேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாட்டில் தொடர்ந்து பணவீக்கமும் உயர்ந்து வருகிறது. மேலும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியும் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே எப்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை கிடைக்கும் ? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அடுத்த அகவிலைப்படி உயர்வுக்காகவும் அரசு ஊழியர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

ஏற்கெனவே இந்த மாதம் ஹோலி பண்டிகையை முன்னிட்டு அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அகவிலைப்படி நிலுவை பற்றிய அறிவிப்பு வெளியாகாததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்த நிலையில் நடப்பு நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்ச் 31ஆம் தேதி அளவில் அகவிலைப்படி நிலுவைத் தொகை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |