தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியல் கசிந்து கட்சிக்குள் அதிர்வுகள் ஆரம்பமாகிவிட்டது. அதன்படி மாநில கலைப்பிரிவு தலைவர் பதவியிலிருந்து காயத்ரி ரகுராம் நீக்கப்படுகிறார். ex எம்.பி சசிகலா புஷ்பா பெண்கள் பிரிவு த் தலைவராக நியமிக்கப்படலாம். பால் கனகராஜ், விபி துரைசாமி, கேபி ராமலிங்கம், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோருக்கு முக்கியமான பொறுப்புகள் வழங்கப்படும். பிற கட்சியினரை வளைப்பது தான் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கிய அசைன்மென்ட் என்று கூறுகின்றனர்.
இந்நிலையில் “என்னை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக பாஜக நினைக்கவில்லை. எங்கள் தலைவர் என்னை நீக்க மாட்டார் என்று பாஜகவின் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். கடினமாக உழைத்தவர்களுக்கு பதவி உயர்வு மட்டுமே பாஜக தருகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். பாஜகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலில் இவர் பெயர் இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.