தனுசு ராசி நண்பர்களே..
இன்று காலை நேரத்திலேயே உங்களுக்கு கலகலப்பான செய்தி வந்து சேரும். தைரியத்தோடும்,தன்னம்பிக்கையோடும் செல்படுவீர்கள். பொது வாழ்வில் புகழ் கூடும் சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.
இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சின் மூலம் தங்களது வியாபாரத்தை லாபகரமாக செய்வார்கள். தேவையான பண உதவியும் கிடைக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக உழைப்பும் அதற்கேற்ற நல்ல பலனும் உண்டாகும்.
இன்று எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது மட்டும் நன்மையை கொடுக்கும் .பெண்களுக்கு மனத்தெளிவு ஏற்படும் சிக்கன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள் கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறு சிறு பிரச்சினைகள் வந்து செல்லும். கூடுமானவரை நீங்கள் கல்வியில் மட்டும் ஆர்வத்தை கொண்டு போவது ரொம்ப சிரப்பு. விளையாட்டை இன்று ஏற கட்டிவிடுவது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீல நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான.
அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்டமான எண் : ஐந்து மற்றும் ஏழு
அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்