சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சுசீந்திரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் கபிரியேல் தலைமையில் ஒரு குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் முருகன் என்பதும், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து காவல்துறையினர் முருகனை கைது செய்து அவரிடம் இருந்த 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேப்போன்றுஅப்பகுதியில் புகையிலை விற்றுக் கொண்டிருந்த 58 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.