Categories
மாநில செய்திகள்

“வேலை நிறுத்தம்”…. இங்கு வழக்கம்போல் பஸ்கள் இயங்கும்…. வெளியான அறிவிப்பு…..!!!!!!

மத்திய அரசை கண்டித்து பல தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தில் வங்கிகள், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளது. இதனால் நேற்று பொதுப்போக்குவரத்தானது கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையில் பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் முன்பே அறிவித்தது போன்று 60 % பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்று தொமுச அறிவித்துள்ளது. ஆகவே சென்னையில் மக்களுக்கு பாதிப்பு இல்லாத அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படும் என தொ.மு.ச. பொருளாளரான நடராஜன் கூறினார். இதனிடையில் இன்று 60% போக்குவரத்து பணியாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் பேருந்துகள் நேற்றை விட, இன்று அதிகமாக இயக்கப்படும். அத்துடன் இன்றைய போராட்டத்தில் முக்கியமான நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |