Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நிலத்தை எழுதி கொடு….. தந்தையை கழுத்தறுத்து கொன்ற மகன்…. சேலத்தில் பரபரப்பு..!!

சேலம் அருகே நிலத்தை எழுதி தருமாறு கேட்டு முதியவரை கழுத்தை அறுத்து கொன்றதாக அவரது மகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் சிவதாபுரம் பகுதியை அடுத்த ஆண்டியா பட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. 62 வயதான இவர் கூலி வேலை செய்து வந்தார்.  இவரது மகன் பூபதி குடும்பத்துடன் தனியாக வசித்து வரும் நிலையில், தந்தை வசம் உள்ள நிலத்தை எழுதி தருமாறு கேட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று காலை ஏற்பட்ட தகராறு முற்றி தந்தை பழனிச்சாமியை கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்துவிட்டு பூபதி தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இதில் பழனிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட அவரது உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பூபதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |