Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இங்கெல்லாம் பேருந்து நிற்காது …. பயணிகளின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

பேருந்தை முற்றுகையிட்டு  பயணிகள்  போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரில் பேருந்து நிலையம் ஒன்று  அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு மதுரையில் இருந்து காரைக்குடி சென்ற தனியார் பேருந்து ஒன்று  வந்துள்ளது. இப்போது  பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த  10 பயணிகள்  பேருந்தில் எறியுள்ளனர். இந்நிலையில் பேருந்தின்  கண்டக்டர்  சில  இடங்களில் பேருந்துகள் நிற்காது என கூறி பயணிகளை இறக்கி விட்டுள்ளார்.

இதனால்  ஆத்திரமடைந்த பயணிகள் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பேரூராட்சி மன்ற கோகிலாராணிநாராயணன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |