நிலைத்தடுமாறி கார் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே காஞ்ஞராப்பள்ளி பகுதியில் அப்துல் ஜெலீன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மாமனார் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாறாமலைப் பகுதியில் ஒரு கிராம்புத் தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக அப்துல் ஜெலீன் தனது குடும்பத்தோடு காரில் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளார்.
இந்த கார் வெண்டலிகோடு பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் நிலைத்தடுமாறி ஒரு வீட்டின் சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 4 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து குலசேகரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.