சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புதுப்பேட்டையில் 16 வயது சிறுவன் டிராக்டர் ஒன்றை ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் சிறுவன் ஓட்டிச் சென்ற டிராக்டர் ஓட்டலுக்குள் புகுந்ததில் இறைச்சிக் கடை வியாபாரி ஆறுமுகம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பரோட்டா மாஸ்டர் மருது பலத்த காயம் அடைந்தார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறைச்சிக் கடை வியாபாரி ஆறுமுகம் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டிராக்டரை இயக்கிய 16 வயது சிறுவனிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.