ஐகோர்ட்டு உத்தரவை கண்டித்து சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரியில் பேருந்து நிலையம் முன்பு சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது எஸ். டி .பி .ஐ. தொகுதி செயலாளர் அன்வர்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் கர்நாடகாவில் பள்ளி கல்லூரிகளில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த ஹைகோர்ட் உத்தரவை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
இதில் ம.ம.க. மாவட்ட செயலாளர் கமரல் ஐமான், மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் வாஞ்சிநாதன், மருது மக்கள் இயக்கம் முத்துப்பாண்டி, எஸ். டி .பி. ஐ. மாவட்ட தலைவர் பிலால்தீன், எரிகாற்று கூட்டமைப்பு கம்பூர் செல்வராஜ், இஸ்லாமிய இளைஞர் அணி அப்துல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.