Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் அதிரடி திட்டம்…. இனி பிளாக்கில் மது பாட்டில் கிடைக்காது?… வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழக சட்டமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இது சம்பந்தமாக சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் டாஸ்மாக் நிர்வாக சீர்திருத்த நடவடிக்கை முழுவதும் கணிணிமயமாகிறது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 11 மது உற்பத்தி நிறுவனங்கள், 9 பீர் உற்பத்தி நிறுவனங்கள் ,1 ஒயின் உற்பத்தி நிறுவனங்கள் வாயிலாக மதுவகைகள் தயாரிக்கப்பட்டு டாஸ்மாக் நிறுவனம் மூலம் விற்பனை செய்யபடுகிறது.

இதில் உற்பத்தி துவங்கும் இடம்முதல் விற்பனை செய்யும் இடம்வரை மொத்த இடங்களும் கணிணிமயமாக்கப்பட்டு மதுபாட்டில் ஒவ்வொன்றுக்கும் தனி தனி பார்கோடுகள் வாயிலாக கண்காணிக்கும் அடிப்படையில் எங்கு?.. எப்போது?… தயாரிக்கபட்டது, எந்த கிடங்கில் எத்தனை நாட்கள் இருப்பு வைக்கபட்டது, எந்த கடையில் எத்தனை மணிக்கு விற்பனை செய்யபட்டது என்று கண்காணிக்கும் நோக்கில் முழுவதும் கணிணிமயமாக்கும் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஆகவே இது விரைவில் நடைமுறையாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இதன் காரணமாக கள்ளசந்தையில் விற்பனை செய்யப்படும் மதுவகைகள் போலி மதுவா..? (அல்லது) எந்தகடையில் யாரால் மொத்த விற்பனை செய்யப்பட்டது என எளிதாக கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

Categories

Tech |