பள்ளி வாகனம் மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் நேற்று பலியானதை அடுத்து, சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து முதன்மை கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த வகையில் மாணவர்களை அழைத்து வரும்போது வாகனங்களில் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும். அதிக அளவில் மாணவர்களை ஏற்றிச் செல்லக்கூடாது. இதையடுத்து சினிமா பாடல்களை போடக்கூடாது.
அதன்பின் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட வேண்டும். மேலும் பள்ளி வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். பேருந்துக்குள் மாணவர்களை ஏற்றும் போதும், இறக்கும்போதும் பேருந்தின் 4 புறமும் கவனிக்க வேண்டும். பள்ளி பேருந்துகள் மட்டுமென்றி வேன்கள், ஆட்டோக்களில் வரும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 22 வகையான விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.