மார்ச் 31-ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மறுநாள் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதாவது கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம், காயங்குளம், கோட்டையம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வழியாக கோயம்புத்தூருக்கு செல்லும். இந்த ரயில் குமரியில் இருந்து காலை 8 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 8.30 மணிக்கு சென்றடையும்.
இதனையடுத்து கோவையில் இருந்து புறப்படும் இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக திருப்பதிக்கு செல்லும். இந்தப் பகுதியில் இருந்து மறுநாள் இரவு 10.20 புனேக்கு செல்லும். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 1-ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஏப்ரல் 3-ம் தேதி மதியம் 3 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். இந்த ரயிலில் மொத்தம் 14 பெட்டிகள் உள்ளது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.