கடலூர் கலெக்டர் அலுவலகத்தின் முன் மாற்றுத்திறனாளி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகில் கார்கூடல் மேட்டு தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவருடைய வயது 46. மாற்றுத் திறனாளியான இவர் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். அதன் பின்னர் அவர் கலெக்டர் அலுவலக வளாகத்தின் முன் அமர்ந்து திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அவர், மாற்றுத் திறனாளிக்கான அரசு உதவி தொகை மாதம் ரூபாய் 1000 நான் பெற்று வருகிறேன். எனவே அந்தத் தொகையை 3000 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என்று கூறி முழக்கங்கள் எழுப்பினார். இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.