Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி ஒரு முயற்சியா?…. கருத்துக்கேட்பு பெட்டி…. மக்களிடம் பெருகி வரும் வரவேற்பு….!!

குளங்கள் மேம்பாடு குறித்து பொதுமக்களின் கருத்துகளை பெற கருத்து கேட்பு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் பகுதிகளில் 13-க்கு மேற்பட்ட குளங்கள் மற்றும் கால்வாய்கள் அமைந்துள்ளது. இந்த குளங்கள் மற்றும் கால்வாய்கள்  மேம்பாடு இன்றியும், பலரது ஆக்கிரமிப்பிலும்  உள்ளது. இதனால் பேரூராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நகரமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவர் கோகிலாராணிநாராயணன் தலைமையில் இந்த குளம் மற்றும் கால்வாய்களை  சரிசெய்வதற்கு பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கு முடிவுசெய்யப்பட்டது. அதேபோல் நகரிலுள்ள பேருந்து நிலையம், செம்மொழிபூங்கா ஆகிய பகுதிகளில் கருத்து கேட்க்கும்  பெட்டிகளை வைத்துள்ளனர்.

இந்த பெட்டியில் பொதுமக்கள் குளங்கள் மேம்பாடு மற்றும் செம்மொழிப்பூங்காவில் மூலிகைச்செடிகள் அமைப்பது குறித்து தங்களது கருத்துகளை எழுதி போட வேண்டும் என அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த பெட்டிகளில்  பொதுமக்கள் தங்களது கருத்துகளை எழுதி போட்டு வருகின்றனர். இந்த முயற்சி அப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |