மகரம் ராசி நேயர்களே …
இன்று சுப காரியம் ஏற்படும் நாளாக இருக்கும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. குடும்பத்தினர்களின் ஆலோசனைகள் தக்க சமயத்தில் கை கொடுக்கும். ஆரோக்கியத் தொல்லை அகல மாற்று மருத்துவம் பலன் கொடுக்கும்.
இன்று குடும்பத்தில் கலகலப்பு ஏற்படும் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு பின்னர் சரியாகும். அக்கம் பக்கத்திலும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் வீண் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
இன்று முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும் .உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள் .இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும்.
இன்று மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைவரின் ஒத்துழைப்பும் இருக்கும். மேற்கல்விகான முயற்சியில் வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும்.இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
.மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்ட்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : இரண்டு மற்றும் மூன்று
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்