சமூக வலைத்தளங்களை கண்காணிப்பதற்கான தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவில் இஸ்ரேல் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, கடத்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், வங்கி மோசடி, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மோசடிகள், போலி கணக்கு மூலம் மோசடி செய்தல், சமூக வலைதளங்களில் போலி செய்திகளைப் பரவவிடுதல், அவதூறு பரப்புதல், இணையதளம் மூலம் பெண்கள், குழந்தைகளை மன ரீதியில் துன்புறுத்துதல், ஆன்லைன் மோசடி, வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவிடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக, 2020-ம் ஆண்டில்தமிழகத்தில் சைபர் குற்றங்கள் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக சென்னை போலீசாருக்கு இந்த தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது இதன் மூலம் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் வாயிலாக நடைபெறும் மோசடிகளை எளிதாக கண்டுபிடிக்க முடியும் என நம்பப்படுகிறது.