Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவன்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றத்தில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசு என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கவியரசு விளையாடுவதற்காக வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுவன் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அனைத்து இடங்களிலும் மகனை தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் சிவராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை தேடி வந்துள்ளனர் நேற்று காலை அலமாதி அருகில் இருக்கும் ஒரு குளத்தில் மாணவனின் சடலம் மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கவியரசின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |