வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை எதிர்த்தும், தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தல், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் ஒன்றிய அரசை கண்டித்து தி.மு.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட பெரும்பாலான கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தினால் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் அடைக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயங்கவில்லை. ஒரு சில அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி வருகிறது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தின் காரணமாக ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.