சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஆட்டோ ஓட்டுநரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி ஆட்டோ ஓட்டுநரான முகமது தாரிக் என்பவருடன் பேசி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் முகமது தாரிக் அங்கு சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது தாரிக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.