சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி 7-வது வீதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் இந்திராநகர் பகுதியில் வசிக்கும் கண்ணன் மற்றும் நந்தகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரும் இணைந்து அப்பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.