Norfolk கடற்கரையில் பொழுதுபோக்கிற்காக சிப்பி போன்ற பொருட்களை சேகரித்த பெண்ணிற்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது.
Norfolk கடற்கரையில், Jennie Fitzgerald என்ற முப்பத்தி எட்டு வயது பெண் சிப்பி உட்பட சில பொருட்களை சேகரித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு ஒரு மரப்பெட்டி கிடந்திருக்கிறது. அதனை வீட்டிற்கு எடுத்து சென்று தன் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து சுத்தம் செய்திருக்கிறார்.
அதன்பின்பு அந்த பெட்டியை திறந்து பார்த்தவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அதனுள், 100 பழங்கால நாணயங்கள், ஒரு வாசனை திரவிய போர்தல், சாவி போன்ற பழங்கால பொருட்கள் இருந்திருக்கிறது. அவர் அந்த பெட்டி யாருக்குரியது? என்பதை அறிய Norfolk கவுன்சிலிடம் ஒப்படைக்கவுள்ளார்.
மேலும், இதுபற்றி Jennie தெரிவித்ததாவது, நான் பொழுதுபோக்கிற்காக குப்பைகளை தான் சேகரித்துக் கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு ஒரு புதையல் பெட்டியே கிடைத்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.