Categories
மாநில செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக…. ரூ.65 லட்சம் மோசடி…. அதிமுக முன்னாள் அமைச்சர் மீது புகார்…!!!!

அரசு வேலை வாங்கித் தருவதாக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர், 65 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.

சேலம் மாவட்டம்  ஜான்சன் பேட்டை கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முனுசாமி. இவர் நேற்று சேலம் போலீஸ் கமிஷனர் நஜ்முல் ஹோதாவிடம் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரில். “நான் கோரைப்பாய் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகிறேன். இதற்கிடையில் 2011 முதல் 2016 வரை அதிமுக ஆட்சியில் நலத்துறை அமைச்சராக இருந்த சுப்பிரமணியத்துடன் எனக்கு தொடர்பு கிடைத்தது. அவர் என்னிடம் அதிமுக விடுதிகளுக்கு பாய் ஒப்பந்தம்  வாங்கி தருவதாக தெரிவித்தார்.

மேலும் சேலம் மாவட்டத்தில் அதிமுக நலத்துறை கட்டுப்பாட்டில் சமையல் பணிக்காக 80 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 20 பேருக்கு வேலை வாங்கித் தர 60 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும் தெரிவித்தார். அவர் சொன்னதை நம்பி நான் எனது உறவினர்கள், நண்பர்களில் வேலை தேடுபவர்களிடம் பணத்தைப் பெற்று 2015 ஆம் ஆண்டு 4 தவணையாக 65 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் வேலையும் வாங்கி தரவில்லை பணத்தையும் திரும்ப தரவில்லை. மேலும் சுப்ரமணியனின் குடும்பத்தினர் என்னை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டலும் செய்தனர். இதனால் மோசடியில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப வாங்கி தர வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |