Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“கந்தூரி விழா” 15,000 பேருக்கு இலவச பிரியாணி…… அசத்திய திண்டுக்கல் இஸ்லாமியர்கள்….!!

திண்டுக்கல் நாகல்நகர் ஜும்மா பள்ளிவாசலில் கந்தூரி விழாவை முன்னிட்டு வழங்கப்பட்ட சமத்துவ பிரியாணியை திரளானோர் நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் நாகல் நகரையடுத்த அனைத்து மதத்தினறிடையே சமத்துவத்தை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் இந்த கந்தூரி விழாவானது முன்னெடுக்கப்படுகிறது. அந்த வகையில்,

இந்தாண்டு நடைபெற்ற விழாவில் சுமார் 15 ஆயிரம் பேருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்பட்டது. காலை 7 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பிரியாணி வழங்கப்பட்ட நிலையில் நீண்ட வரிசையில் பாத்திரங்களுடன் காத்திருந்து அனைத்து மதத்தைச் சார்ந்த மக்களும் பிரியாணியை வாங்கிச் சென்றனர்.

Categories

Tech |