மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் ரேஷன் கடை விற்பனையாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள நெடி கிராமத்தில் விஸ்வநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் குணமங்கலம் ரேஷன் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது மோட்டார் சைக்கிளில் ரெட்டணை நோக்கி சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து சாலையை கடக்க முயன்ற போது சென்னை நோக்கி வேகமாக சென்ற கார் விஸ்வநாதனின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த விஸ்வநாதனை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விசுவநாதன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.