ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும், உக்ரைன் ஜனாதிபதியும் சந்தித்தால் நிச்சயம் எதிர்மறையாகத் தான் இருக்கும் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா ஒரு மாதத்தை தாண்டி கடுமையாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளை சேர்ந்த அதிகாரிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று ரஷ்யாவின் வெளியுறவு துறை அமைச்சரான செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்ததாவது, ரஷ்யா மேற்கொண்டிருக்கும் ராணுவ நடவடிக்கை தொடர்பில், துருக்கி மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய நாட்டின் தூது குழு தயாராகிக்கொண்டிருக்கிறது.
மேலும் ரஷ்ய அதிபரும், உக்ரைன் அதிபரும் தற்போது சந்திக்க வாய்ப்பே இல்லை என்று கூறியதோடு, தற்போது அந்த சந்திப்பு நடந்தால் எதிர்மறையாக தான் முடியும் என்றும் கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், உக்ரைன் அதிபரை சந்திக்க மறுத்தது கிடையாது. எனினும் அதற்கு முன்பாக இந்த சந்திப்பிற்காக நன்றாக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தான் அவர் கருதுகிறார் என்று கூறியுள்ளார்.