Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடிப்பு… நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை…!!

சாணார்பட்டி அருகில் பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகில் கணவாய்பட்டி ஊராட்சியில் கோட்டைக்காரன்பட்டி 2வது தெருவில் 10-க்கும் அதிகமான வீடுகள் அமைந்துள்ளன. இந்த பகுதிக்கு சென்று வருவதற்கு திண்டுக்கல் to நத்தம் மெயின் சாலையில் இருந்து பாதை அமைந்துள்ளது. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான நிலத்தில் பாதையை ஆக்கிரமித்து அந்த ஊரை சேர்ந்த பெண் ஒருவர் வீடு கட்டியுள்ளார்.

இதனை அடுத்து அந்த வீட்டை அப்புறப்படுத்தி பாதையை அமைத்து தர வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தனபாலன் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் நேற்றுமுன்தினம்  காலை அந்த இடத்திற்கு சென்று அந்த வீட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதைப் பார்த்து வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது அவரிடம் நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, கணவாய்ப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் நிஷாராமகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து வீடு இடிக்கப்பட்டு பாதை உருவாக்கப்பட்டது.

Categories

Tech |