பாண்டியராஜன் தனது குடும்பத்துடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வந்தவர் பாண்டியராஜன். இவர் கன்னி ராசி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனையடுத்து நெத்தியடி, கபடி கபடி, ஆண்பாவம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும், இவர் பல்வேறு கலைஞர்களை சினிமாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் கடந்த 1986ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது மகன்கள், மனைவிகள் மற்றும் பேரன்களுடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.