சுட்டெரிக்கும் கோடை வெயிலால் மின் தேவை எப்போது இல்லாத அளவைவிட புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
தமிழகத்தில் சராசரியாக தினசரி மின் தேவை 14 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. இது கோடை காலத்தில் அதிகரிக்கும். இதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி மதியம் 12 மணிக்கு மின்தேவை 16, 845 மெகாவாட் ஆக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவிலான இருந்தது. இந்த நிலையில் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு மின்வாரியத்தில் கிடைக்கும் மின்சாரம் போதவில்லை என்பதால் மத்திய அரசின் மின் நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து மின் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த ஆண்டு கோடைகாலத்தில் இன்றைய 17 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வெயில் வழக்கத்தை விட கடுமையான சுட்டெரித்தத நிலையில் காலை 1:41 மணி அளவில் மின் தேவை எப்போதும் இல்லாத வகையில் 17, 170 மெகாவாட்டாக அதிகரித்தது. இதனை பூர்த்தி செய்யும் வகையில் மின் உற்பத்தி மற்றும் மின் கொள்முதல் இருந்தன. இதனை தொடர்ந்து மின் தேவை வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.