தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “முடிந்தால் என்னைக் கைது செய்து பாருங்கள்” என்று சவால் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “திமுகவின் அனைத்து அவதூறு வழக்குகளையும் எதிர்கொள்ள தயார். எல்லாவற்றையும் அனுப்புங்கள் நான் மொத்தமாக சந்திக்கிறேன்.
அதிமுக முன்னாள் அமைச்சர்களை மிரட்டி பணம் வசூலிப்பதாக என் மீது குற்றச்சாட்டு வைக்கும் ஆர்.எஸ்.பாரதி திராணி இருந்தால் காவல்துறையை அழைத்து வந்து என்னை கைது செய்யட்டும். அடுத்த 6 மணி நேரம் நான் கமலாலயத்தில் தான் இருப்பேன். அப்படி கைது செய்யவில்லை என்றால் மக்கள் திமுகவினர் கூறுவதை ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.