Categories
மாநில செய்திகள்

நேருக்கு நேர் மோதிய பைக்குகள்…. விபத்தில் பிரபல நடிகர் பலி… பெரும் சோகம் ….!!!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நடிகர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செங்குன்றத்தை அடுத்த மொண்டியம்மன் நகரில் உள்ள ஜீவா தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது40). இவர் புதிதாக எடுக்கப்பட்டு வருகின்ற செங்குன்றம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார் சினிமா படப்பிடிப்பை முடித்து விட்டு தனது பைக்கில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது செங்குன்றம் – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் ஆலமரம் பகுதி அருகே சாலையை கடந்தபோது அவருக்கு எதிராக இருசக்கர வாகனத்தில் வந்த பம்மது குளம் எல்லையம்மன் பேட்டை கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 24) என்ற நபர், நேருக்கு நேராக இவர் மீது வேகமாக மோதியுள்ளார்.

இந்த கோர விபத்தில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். அதன்பின் அக்கம் பக்கத்தினர் மீட்டு பாடியநல்லூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஜெயக்குமாரை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்துள்ளார். இதையடுத்து சரவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் குறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |