ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைக்கவசம் மற்றும் சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்தியா முழுவதும் சாலை விபத்துகளை குறைக்கும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியவேண்டும், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்ட கூடாது,
உள்ளிட்டவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் நகர தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா கலந்துகொண்டு தலைக்கவசம் அணிந்த படி இருசக்கர வாகனத்தில் பயணித்தார் அப்போது ரோஜாவுடன் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது கட்சி தொண்டர்கள் கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.