அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மதுரை மண்டலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நாளை முதல் கல்வித்துறை இயக்குனர்கள் குழுவானது ஆய்வு செய்ய உள்ளது. அதன்படி அரசு பள்ளிகளின் செயல்பாடுகளை கண்டறிய, பள்ளிக்கல்வித்துறை மண்டல அளவிலான ஆய்வு நடத்த முடிவு செய்துள்ளது.
இதையடுத்து பள்ளி கல்வி இயக்குனர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது.இந்த ஆய்வின் இறுதியில் மாவட்ட கல்வி அதிகாரிகளை அழைத்து ,ஆலோசனையும் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.
இதன்படி மதுரை மண்டலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நாளை நடக்கவுள்ள ஆய்வில், இயக்குனர் லதா, இணை இயக்குநர்கள் அமுதவல்லி ,உமா ,செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு இந்த அதிகாரிகள் பள்ளியில் செயல்பாடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளை ஆய்வு மேற்கொண்டு, நாளை மறுதினம் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.