மணல் கடத்த முயன்ற இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சீவலப்பேரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்தை காவல்துறையினர் பார்த்தனர். இதனையடுத்து காவல்துறையினர் மணல் அள்ளி கொண்டிருந்த இரண்டு பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் மணி மற்றும் அசோக் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.