Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்..!!

மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் தொழிலாளியான அக்பர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அக்பர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது தென்காசி நோக்கி வேகமாக சென்ற அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அக்பர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |